அழுத்தம் என்ற இயற்பியல் அளவைப் அளக்கலாம். ஒரு பொருளின் ஒரு சதுரமீட்டர் புறப்பரப்பின்மீது செங்குத்தாகச் செயல்படும் விசை உந்து விசை அல்லது அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது.
அழுத்தம் =உந்துவிசை/பரப்பு
P=FORCE/AREA P=F/A
அழுத்ததின் SI அலகு பாஸ்கல் ஆகும். அதாவது அறிஞர் பிளேய்ஸ் பாஸ்கல் நினைவாக) இப்பெயர் வைக்கப்பட்டது ஆகும்.
1 பாஸ்கல் – 1 N/m2
விசையால் செலுத்தப்படும் அழுத்தம் விசையின் எண் மதிப்பையும், அது செயல்படுத்தப்படும் தொடுப்பரப்பையும் சார்ந்து இருக்கும்.
ஒரு பொருளின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அதன் மீது செயல்படும் உந்து விசையை அதிகரிக்க வேண்டும் அல்லது உந்து விசை எயல்படும் பரப்பைக் குறைக்க வேண்டும். மிகச்சிறிய பரப்பின்மீது அதிக அழுத்தத்தைச் செலுத்தி அதிக விளைவை ஏற்படுத்துவற்காகவே, கோடாரி, ஆணி, கத்தி, ஊசி, துப்பாக்கிக் குண்டுகள் முதலியன மிகவும் கூர்மையான முனையைக் கொண்டுள்ளன.
எடுத்துக்காட்டுகள் :
1. அழுத்தத்தைக் குறைக்கவும், சாலையுடனான தொடுபரப்பை அதிகரிக்கவும் கனரக சரக்கு வாகனங்கள் அதிக எண்ணிக்கையிலான சக்கரங்களைக் கொண்டுள்ளன.
2. தோளின் மீது செலுத்தும் அழுத்தத்தைக் குறைக்கவும், தொடுபரப்பை அதிகரிக்கவும் முதுகில் சுமந்து செல்லும் பைகளில் அகலமான பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன.
